பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
பெருந்துறை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை, நடக்கிறது. பெருந்துறை அடுத்த, எல்லப்பாளையம், கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2மாணவ, மாணவியருக்கு, ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை, வரும், 18ல், மதியம், 3:00 மணி முதல், 5:30 மணி வரை நடக்கிறது. கல்விக் கடவுள் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். அவரை வணங்கினால், கல்வியறிவு பெருகும். எனவே, ஞாபகசக்தி குறைவாக உள்ள மாணவர்கள், தங்களின் நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருளை யாகத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்.