பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
பழநி;தை அமாவாசையை முன்னிட்டு, பழநி சண்முக நதியில் நீராடிய பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை நினைத்து நதிக்கரைகளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, பழநி சண்முகநதி கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, எள், பச்சரிசாதம் படையல் படைத்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மலைக்கோயிலில் உடுமலை, பழநி சிவனாடியார் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. பெரிய நாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில், சோளீஸ்வரர், இடும்பன்கோயில், கோதைமங்கலம் மானுார் சுவாமிகள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிேஷகம் நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரத்துடன், உள்பிரகார வலம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களிலும் அமாவாசை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.