பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
கூடலுார்: தை அமாவாசையை முன்னிட்டு, கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை சுரங்கனாறு நீர்வீழ்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள கூத்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், சந்தனம், குங்குமம் அபிஷேகம் நடந்தது. கூத்த பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி:மாவூற்று வேலப்பர் கோயிலில் தை அமாவாசை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வேலப்பர், கருப்ப சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள், மலைப்பகுதி கோயில் வளாகத்தில் உள்ள சுனையில் நீராடி வேலப்பரை வழிபட்டனர்.
போடி: தை அமாவாசையை முன்னிட்டு போடி, பிச்சாங்கரையில் கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோச பூஜைகள் நேற்று நடந்தன. இங்கு வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது என்பது ஐதீகம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன் பரம்பரையை சேர்ந்த அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்து சென்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தன.
* போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* போடி கொண்டரங்கி மல்லையாசுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.