பதிவு செய்த நாள்
19
ஜன
2018
10:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின், 10 நாட்களும், காலை, மாலை இரு வேளையிலும், வாகனங்களில் உற்சவர் வலம் வருவார். தை பிரம்மோற்சவத்தின், 7வது நாள் நிகழ்ச்சியாக, தேரோட்டம் நடைபெற்றது.காலை, 5:45 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் கோவிலிலிருந்து தேரில் எழுந்தருளினார். அதன்பின், தேர் புறப்பாடு காலை, 7:00 மணிக்கு துவங்கியது. இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு, ராகவா, கோவிந்தா என்று கோஷத்துடன் தேரை இழுத்தனர். நான்கு வீதிகளில் வலம் வருகிறது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், பெருமளவில் கலந்து கொண்டு, வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.