பதிவு செய்த நாள்
20
ஜன
2018
02:01
ஆர்.கே.பேட்டை : சாய்பாபா கோவிலில், வரும், 27ம் தேதி, தசமி பூஜை நடைபெற உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோவில். சோளிங்கரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில், நரசிம்ம சுவாமி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.வியாழன்தோறும் சிறப்பு பூஜைகளும், பவுர்ணமி நாளில், பல்லக்கு சேவையும் நடக்கின்றன.சாய்பாபாவின், 100வது திதியை ஒட்டி, கடந்த ஆண்டு முதல் தசமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.வரும், 27ம் தேதி, தசமி பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கான உபயதாரராக பங்கேற்க விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.