பதிவு செய்த நாள்
27
ஜன
2018
12:01
விருத்தாசலம்: விஜயமாநகரத்தில் நாளை நான்கு கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புதுவிளாங்குளத்தில் கற்பக விநாயகர், காசி விஸ்வநாதர், ஆதிகேசவ பெருமாள், பச்சைவாழியம்மன், பாலதண்டாயுதபாணி கோவில்களுக்கு நாளை (28ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன், பாலிகை பூஜை, கலசஸ்தாபன மகா தீபாராதனை மற்றும் யாகசாலை பிரவேச பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும்; நாளை 28ம் தேதி காலை 6:00 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 8:30 மணியளவில் பாசியம்மன் கோவில் துவங்கி, பச்சைவாழியம்மன், பாலதண்டாயுதபாணி, கற்பக விநாயகர், காசி விஸ்வநாதர், ஆதிகேசவப் பெருமாள் கோவில்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.