பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
திருப்பூர் : தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் துவங்கியுள்ள நிலையில், கிராமங்களில், நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் பாரம்பரியமான நிகழ்வு கும்மியாட்டத்துடன் துவங்கி உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கிராமங்களில், நிலாவுக்கு சோறு மாற்றும் நிகழ்வை, பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். கிராமத்தில், பொதுவான இடத்தில், பெண்கள், சிறுவர், சிறுமியர் கூடி, நிலா வந்ததும் விழா துவங்குகிறது. பிள்ளையார் பிடித்து வைத்து, வீடுகளில் இருந்து எடுத்து வரும் உணவு பதார்த்தங்களை படைத்து, நிலாவை வழிபடுகின்றனர்.
அதன்பின், கும்மிபாடல்களை பாடி, கும்மியடித்து விளையாடுகின்றனர். நிறைவாக, அனைவரும் உணவை Oஉõப்பிடுவர். இந்த வழிபாட்டின் முதல் நாள், தைப்பூச தேரோட்டத்துக்கான கொடியேற்ற நாளில் இருந்து துவங்குகிறது. முதல் நாள், நிலா பிள்ளைக்கு, வாழைப்பழமும், நாட்டு சர்க்கரையு ம் படைக்கின்றனர். தேரோட்ட நாள் வரை, மற்ற நாட்களில் கலவை சாதங்களை படைக்கின்றனர். தேரோட்ட நாளில், இனிப்பு கச்சாயம், ஒப்புட்டு படைத்து, வழிபடுகின்றனர். நிலாவை பிள்ளையாக கருதி, கிராமப்புற பெண்களாக தாய்மார்கள், சோறு ஊட்டும் விழாவாக, நிலாவுக்கு சோறு மாற்றும் விழா நடக்கிறது. திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், நேற்று முன்தினம், பாரம் பரியமான இவ்விழா துவங்கியுள்ளது. அவ்வகையில், மங்கலத்தை அடுத்துள்ள வேட்டுவபாளையத்தில், ஊர்பொதுமக்கள் சார்பில், நிலா பிள்ளைக்கு சோறு மாற்றுதல், நேற்று முன்தினம் துவங்கியது. மலைக்கோவில் குழந்தைவேலாயுதசாமி கோவில், தேரோட்டத்தை மையமாக வைத்து, இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. பெண்கள், தங்களது வீடுகளில் இருந்து உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து, நிலாவுக்கு படைத்தும், கும்மி பாட்டு பாடியும் வழிபட்டு வருகின்றனர். சிறுவர், சிறுமியரை வைத்து விழா நடத்துவதன் மூலமாக, கிராமப்புற மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள், கும்மிபாடல் போன்றவை, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கப்படுவதாக, பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.