பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது.ஸ்தலசயனபெருமாள், நிலமங்கைதாயார் உள்ளிட்டோர் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இந்த கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது.பெருமாள், தாயார், தேவியர், பூதத்தாழ்வார், ராஜ அலங்காரத்தில், மஹா மண்டபத்தில் எழுந்தருளினர். பட்டாச்சாரியர்கள், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை வரை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் உச்சரித்தனர். மாலையில், சகஸ்ர தீபாராதனை நடந்து, பெருமாள், தாயார், தேவியருடன், பக்தர்களுக்கு, ஊஞ்சல் சேவையாற்றி அருளாசி வழங்கினர். பக்தர்கள் பங்கேற்று, சங்கல்பம் பெற்றனர்.