பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
திருப்பூர் :மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் தேர்த்திருவிழா துவங்கியது; வரும், 31ல் தேரோட்டம் நடைபெறவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூசத் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது. இதை முன்னிட்டு, பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி, பறவைக்காவடியுடன் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்தாண்டு சந்திர கிரகணம் வருவதால், வழக்கமாக மாலை நேரத்தில் நடக்கும் தேரோட்டம், காலையில் நடைபெறவுள்ளது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழாவில், ேநற்று காலை, மயில் வாகனத்துக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மலைக்ேகாவிலில், கொடிேயற்றப்பட்டது. அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.வரும், 31ம் தேதி அதிகாலை, 3:00க்கு, மகா அபிஷேகம் நடக்கிறது; காலை, 6:00க்கு, சுவாமி ரதத்தில் எழுந்தருளுகிறார். காலை, 10:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
l மலை மீது தேரோடும் கோவில் என்ற சிறப்பு பெற்ற, ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவிலில், நேற்றுமுன்தினம் கொடியேற்றம் நடந்தது. வரும், 30ம் தேதி காலை, 8:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா; மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 31ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. வரும்,31ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. காலை, 9:05க்கு சுவாமி ரத ஆரோகணம் மற்றும் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இடை நிறுத்தாமல், கிழக்கு வீதியில் உள்ள தேர் நிலையில், சென்றடைகிறது. பிப்., 1ம் தேதி, பரிவேட்டை; 2ம் தேதி, தெப்பத்தேர் உற்சவம்; 3ம் தேதி, கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம்; காலை, 10:35க்கு ரத ஆரோகணம் மற்றும் மலைத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
l விராலிக்காடு, சென்னியாண்டவர் கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, கடந்த, 22ல் துவங்கியது. நேற்று முன்தினம், சுவாமிக்கு திருக்காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது. வரும், 30ம் தேதி காலை, 7:35க்கு, தேர் கலச பூஜை, அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:45க்கு திருக்கல்யாணம்; இரவு, யானை வாகன காட்சி, திருவீதி உலா நடக்கிறது. வரும், 31ம் தேதி காலை, 10:45க்கு, திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் நடக்கிறது.
lமலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், இன்று காலை, 11:30 மணிக்கு, தைப்பூசத்தேர்த்திருவிழா, கொடியேற்றம் நடக்கிறது. வரும், 29ம் தேதி மயில் வாகன காட்சி; வரும், 30ல் திருக்கல்யாணம்; யானை வாகன காட்சி திருவீதி உலா; வரும், 31ம் தேதி காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், குழந்தை வேலாயுதசுவாமி, திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
l அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தேர்த்திருவிழா, வரும், 31ல் நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம்; 5:30க்கு திருக்கல்யாணம்; காலை, 7:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.