திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் சப்த கன்னியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கிரிவலப்பாதை, சொக்கம்மன் கோவில் தெருவில், ஸ்ரீ சப்த கன்னியம்மன் மற்றும் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அமைக்கப்பட்டு, இக்கோவிலுக்கான மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை, 8:00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை, அம்மன் வழிபாட்டு குழுவினர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.