பதிவு செய்த நாள்
29
ஜன
2018
11:01
திருமுக்கூடல் : திருமுக்கூடலில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் நேற்று, மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் அரச மரத்தடியில், 100ஆண்டுகள் பழமைவாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஐம்பொன் விநாயகர் சிலை புதியதாக வைத்துள்ளனர். நேற்று, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.முன்னதாக, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, விநாயகர் பூஜை, மஹா கணபதி ஹோமம் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கலசம் புறப்பாடு முடிந்து, 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.