செஞ்சி : செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி தாலுகா, செத்தவரை ஸ்ரீசிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பிரதோஷ நாயகர் நந்தி பெருமானுக்கும், சொக்கநாதர், மீனாட்சியம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும், மகா அபிஷேகம் செய்தனர். சிவ வாத்தியங்கள் முழங்க நந்தி பெருமானுக்கு ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் செய்தார். தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா தீபாராதனையும், நந்தி வாகனத்தில் மீனாட்சி, சொக்கநாதர் கோவில் உலாவும் நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.