வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மத்வ நவமி விழா நடந்தது. நிர்மால்ய அபிேஷகத்துடன் பால், தயிர், நெய், தேன், பழ அபிேஷகங்கள் நடந்தன. சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் மத்துவர் உருவப்பட ஊர்வலம் வேதபாராயணத்துடன் நடந்தது. பக்தர்கள் மலர் வழிபாடு செய்தனர். மத்துவர் வாழ்க்கை குறித்து ராகவேந்திரா பிருந்தாவன அர்ச்சகர் கோபிநாதன் பேசினார். சுதர்சன், பாலாஜி, ஹரி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.