கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பால தண்டாயுதபாணி முருகன் கோவிலில், தைப்பூச விழா, விமரிசையாக நடந்தது. திருவிழா முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகனுக்கு மலர்கள் கொண்டு, ராஜ அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.