பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
கிருஷ்ணராயபுரம்: தைப்பூசம் திருவிழா முன்னிட்டு, குளித்தலைக்கு தீர்த்தவாரி செல்ல, கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவில் சுவாமியை வழி அனுப்பும் நிகழ்ச்சி, திம்மாச்சிபுரம் பெருமாள் கோவிலில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பிகை சமேத சிம்மபுரிஸ்வரர் சுவாமிகள், தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, குளித்தலை காவிரி ஆற்றில், தீர்த்த வாரி செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு, சுவாமிகளை முறையாக வழி அனுப்பும் நிகழ்ச்சி, திம்மாச்சிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சிவன் மற்றும் அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவ மூர்த்திகள், வாகனங்களின் மூலம், தீர்த்த வாரிக்கு, குளித்தலைக்கு கொண்டு செல்லப்பட்டன.