பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், பஞ்ச கருட சேவை விழா, வரும், 9ல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, திருவீதி உலா நடக்கிறது. 10 காலை, 6:00 மணிக்கு, கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வாரி விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், தோமாலை, சாற்றுமுறை, மாலை, 6:00 மணிக்கு, அழகிரிநாதர் - ஆண்டாள் நாச்சியாருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. பின், கற்பகம் நாட்டிய கலாலயா மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கும். பிப்., 11 காலை, 6:00 மணிக்கு, நவகலச ஸ்தபந திருமஞ்சனம், 10:00 மணிக்கு நாச்சியார் வைபவம் சொற்பொழிவு, 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை, அழகிரிநாதருக்கு சாத்துபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஆண்டாள் திருக்கல்யாண ம ?ஹாத்சவம், மாலை, 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.