பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த, 15ம் ஆண்டு உற்சவ விழாவில், திரைப்பட இசைமைப்பாளர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய் நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலின், 15ம் ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது.
காலை, 9:30 மணிக்கு, சகஸ்ரநாம அர்ச்சனை, மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை், 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், திரைப்பட இசை அமைப்பாளர்கள் சங்கர்கணேஷ், ஜீவாவர்ஷினி ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. பிற்பகல், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஓம் சாயி, ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாம ஜெபம் பஜனைக்குழுவினரால் பாடப்பட்டது. நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதார துறை முதன்மை மருத்துவ அலுவலர் கோபாலரத்தினம், கே.ஜி.கண்டிகை கேசவுலு உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சாய்பாபாவை வழிப்பட்டனர். விழாவிற்கு முன்னதாக அதிகாலையில், காகட ஆரத்தி மற்றும் அபிஷேகம், மூலவருக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.