பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
கேளம்பாக்கம் : தையூர், செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்களில், உண்டியல் வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. அறநிலையத் துறைக்குட்பட்டு, தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளன.பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் பிரார்த்தனைக்கு காணிக்கை செலுத்தவும், இங்கு உண்டியல் இல்லாததால், மன விரக்தி அடைகின்றனர்.தற்போது, இக்கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை மட்டுமே கிடைக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்க, உண்டியல் வைக்கவும், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களுக்கு கட்டணம் வசூலிக்க, பணியாளரை ஒருவரை நியமிக்கவும் வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதே போல், கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலிலும், அறநிலையத் துறை சார்பில் காணிக்கை உண்டியல் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.