பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
பழைய திருப்பாச்சூர் : பழைய திருப்பாச்சூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 12ம் தேதி, மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று காலை. பந்தக்கால் நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. பின், வரும் 12ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, மயானத்தில் பொம்மை செய்தலும், காலை, 11:00 மணிக்கு, முதல்கால பூஜையும், காலை, 11:30 மணிக்கு அலகு குத்தி நிற்க வைத்தலும் நடைபெறும். பின், மாலை 6:00 மணிக்கு 2ம் கால பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், இரவு, 11:00 மணிக்கு தீச்சட்டி எடுத்தலும் நடைபெறும்.
தொடர்ந்து மறுநாள், அதிகாலை, 1:00 மணிக்கு, 4ம் கால பூஜையும், அதிகாலை, 1:00 மணிக்கு, மயானத்தில் பொம்மைக்கு கண் திறத்தலும் நடைபெறும். பின், அதிகாலை 4:00 மணிக்கு வாசீஸ்வரர் கோவில் திருக்குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, 5ம் கால பூஜையும், தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, தீபாராதனையும் நடைபெறும். பின், காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு அலகு குத்துதலும், பிற்பகல், 2:00 மணிக்கு, அம்மன் வீதி உலாவும் நடைபெறும். பின், இரவு, 8:00 மணிக்கு, விடையாத்தி உற்சவத்துடன் சிவராத்திரி விழா நிறைவு பெறும்.