பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
பழைய திருப்பாச்சூர் : பழைய திருப்பாச்சூரில் உள்ள கமல விநாயகருக்கு மகா கும்பாபிஷேக விழா, நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று காலை, 6:00 மணிக்கு கோ பூஜையும், விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெறுகிறது. தொடர்ந்து. மாலை 6:00 மணிக்கு. விக்னேஷ்வர பூஜையும், கும்ப அலங்காரமும், முதல்கால யாக வேள்வி பூஜையும் நடைபெறும்.பின், இரவு, 9:30 மணிக்கு. மகா பூர்ணாஹூதியும், இரவு 11:00 மணிக்கு கோர கலசம் தாபனமும், விநாயகருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெறும்.பின், கும்பாபிஷேக நாளான, நாளை காலை 5:00 மணிக்கு, வேத பாராயணமும், காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 7:00 மணிக்கு, மகா சங்கல்பம் நடைபெறும்.காலை, 8:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதிம், காலை, 9:15 மணிக்கு, மூலவர் கோபுர அபிஷேகமும், காலை 9:40 மணிக்கு, மூலவர் கும்பாபிஷேகமும், காலை 10:00 மணிக்கு, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறும்.