திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில்‚ தைபூசத்தை முன்னிட்டு‚ அன்னதானம் நடந்தது. திருக்கோவிலுார்‚ ஞானானந்தா‚ நிகேதனில், தைபூசவிழாவையொட்டி, முற்பகல் 11:30 மணிக்கு‚ சத்சங்க மண்டபத்தில்முருகப்பெருமான் படத்திற்கு வழிபாடு நடந்தது.ஞானானந்தா நிகேதன் அறக்கட்டளை தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சதாசிவகிரி‚ பிரபாவனந்த சரஸ்வதி‚ ஆத்மதத்வானந்த சரஸ்வதி‚ அம்ருதேச்வரவனந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீமதி லதாராகவன் செய்திருந்தார்.