பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, வடுகம் ராஜகணபதி, சக்தி மாரியம்மன், துர்க்கையம்மன், நவக்கிரஹ ஆலய நூதன ஜீரணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம், மார்ச், 14ல் நடக்கிறது. வரும், 12ல், கிராம சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்; 13ல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 14 காலை, 4:30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது காலை, 6:00 மணிக்கு மேல் ராஜகணபதி, மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.