பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
மரக்காணம்: மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதிஹோமம், கங்கை திரட்டல், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை, காப்பு கட்டுதல், கும்பஅலங்காரம், கலாகர்ஷணம், பிரவேச பலி முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மஹாபூரணாஹூதி, கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பரிசாஹூதி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு செல்லியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு ஸ்ரீலஸ்ரீசீனுவாசசாமி குழுவினர், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.