விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா, உலகலாம்பூண்டி கிராமத்தில் புஷ்பவல்லி நாயிகா சமேத உலகலந்தபெருமாள் கோவில், கும்பாபிேஷகம் நாளை (7 ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை 8:00 மணி முதல் புன்யாகம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி பிம்ப கலச படிமானம் அஷ்டபந்தனம் சாற்றுதல் மற்றும் மாஹசாந்தி ஹோமம், திருமஞ்சனம் சயணம் நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை 7:05 மணிக்கு கும்பம் புறப்பாடு, விமான கும்பாபிேஷகமும், காலை 7:15 மணிக்கு மூலவர் சம்ப்ரோக் ஷணம், சாற்றுமறை தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. பரனுார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் மற்றும் திருக்கோவிலுார் மடாதிபதி ஸ்ரீனிவாசராமானுஜ ஜூயர் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிேஷக விழா நடக்கிறது.