ஆண்டாள் கோயிலில் இன்று பகல்பத்து உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2011 10:12
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் இன்று (டிச.26) துவங்குகிறது. இதையொட்டி அன்று மாலை ஆண்டாள்,ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து பகல் மண்டபத்திற்கு புறப்பாடு, வேதப்பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்ப கடாஷித்து மண்டபம் சேர்தல் நடக்கிறது. இரவுபெரிய பெருமாள் கருடாழ்வார், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் ஆண்டாள் சன்னதி கல்யாண மண்டபத்தில் திருப்பல்லாண்டு தொடக்கமும் நடக்கிறது. தொடர்ந்து திருப்பல்லாண்டு வியாக்யானமும், பெரிய பெருமாள் பக்தி உலாவதலும், ஆண்டாள், ரெங்கமன்னாருடன் புறப்பாடு மூலஸ்தானம் சேருதல் நடக்கிறது. ஜன.5ம் தேதி முதல் நடக்கும் ராப்பத்து நிகழ்ச்சியையொட்டி, அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.