முருகப்பெருமானை ஆறுமுகன் என்கிறோம். ஆறுமுகம் என்று பெயருள்ளவர்கள் தங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஏனெனில், இந்தப் பெயருக்கு தெய்வத் தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற தன்மைகள் இருக்கிறது. ஒருவர் நோய்வாய்ப்பட்டு மரண அவஸ்தையில் இருந்தால் ஆறுமுகா என்றால் போதும். எமனின் கோர முகம் கண்முன் தெரியும்போது, ஆறுமுகா என்றால், அவனது ஈரமுகம் ஆறும் தோன்றும் என்பது ஐதீகம்.