கிருஷ்ணகிரி: அனுமன் ஜெயந்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டம் அதிகமானாதால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தேவசமுத்திரம் பிரிவு சாலையில் போலீஸார் தடுப்பு அமைத்து வாகனங்களை ஒழுங்கு படுத்தினர்.
* மஹாராஜகடை அங்கனமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அந்த பகுதி சுற்றுவட்டார பக்தர்கள் இரு முடி கட்டி வந்து இரு முடி காணிக்கை செய்தனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மலும் வெகலஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.