பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
ராசிபுரம்: ராசிபுரத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா, எருமை கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் அருகே உள்ள, மேட்டுக்காட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி, 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில், பத்ரகாளியம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள், அம்மனுக்கு கணிக்கையாக எருமை கிடாக்களை கோவிலுக்கு வழங்குவர். எருமைக்கிடாக்களை வரிசையாக நிற்க வைத்து, பூசாரி தீர்த்தம் தெளிப்பார். இதில், எது முதலில் தலையை ஆட்டுகிறதோ, அந்த எருமை கிடாவை அம்மனுக்கு பலி கொடுக்கின்றனர். பிறகு, கோவில் முன் தோண்டப்பட்டுள்ள குழியில், போட்டு மூடி விடுகின்றனர். பிறகு, பொங்கல் வைத்து, அலகு குத்தி, தீ மிதிக்கின்றனர். நேற்று நடந்த விழாவில், எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.