பதிவு செய்த நாள்
08
பிப்
2018
01:02
மத்திய பாதுகாப்பு அதிவிரைப்படையினர் (ஆர்.ஏ.பி.,) பழநி போலீஸ் ஸ்டேஷன்களில் கள ஆய்வு செய்தனர்.
கோவையில் உள்ள மத்திய பாதுகாப்பு அதிவிரைவுப்படையினர் உதவிகமிஷனர் இளங்கோ தலைமையில் நேற்று பழநிக்கு களஆய்வுப்பணிக்காக வந்தனர். அவர்களை டி.எஸ்.பி., முத்துராஜன், இன்ஸ்பெக்டர் வைரம் வரவேற்றனர். பழநிபகுதிகளில் முக்கிய சுற்றுலா தலங்கள், குற்றசம்பவம் ஆவணகோப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 60 க்கு மேற்பட்ட அதிவிரைவுப்படையினர் துப்பாக்கியுடன் பழநிக்கு வந்ததால், மீனாட்சியம்மன்கோயில் விபத்தைத் தொடர்ந்தது. பழநியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. விரைவுப்படையினர் கூறுகையில், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வோம். அந்த ஊரில் சட்ட ஒழுங்குபிரச்னைகள், திருவிழாக்கள், குற்றவழக்கு பின்னணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்வோம். அது தொடர்பான விபரங்களை சேகரித்து டில்லிக்கு அறிக்கையாக அனுப்பி வைப்போம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் தங்கி கள ஆய்வு மேற்கொள்கிறோம், ” என்றனர்.