குன்னுார் : குன்னுார் அருகே, அருவங்காடு ஐயப்பன் கோவிலில், அஷ்ட மங்கள பிரசன்னம் நிகழ்ச்சி இன்று துவங்கி, இரு நாட்கள் நடத்தப்படுகிறது. அருவங்காடு - ஜெகதளா சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், தேவ பிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்றும், நாளையும் அஷ்ட மங்கள பிரசன்னம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நம்பூதிரி பிரம்ம பனாவூர் பரமேஸ்வரன் முன்னிலை வகிக்கிறார். பட்டாம்பியை சேர்ந்த ஜோதிடர் சீனிவாசன், தேவ பிரசன்னம் பார்க்க உள்ளார். இதில், மக்கள் நன்மை; அமைதிக்காக சிறப்பு பூஜைகளும் செய்யப்பட உள்ளன. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.