Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பஞ்சாமிர்தம் டப்பாவில் ... மீனாட்சி அம்மன்கோயில் தீவிபத்து: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயிலை காப்போம்: கோயிலில் மங்கள இசை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
01:02

மீனாட்சி அம்மன் கோயிலில் மங்கள இசையை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்து தெய்வங்களை சாந்தப்படுத்த வேண்டும். மங்கள இசை பக்தர்களின் மனதில் மென்மையான ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும். கோயிலில் துாய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தற்போது இது போன்ற ஒரு கோயிலை உருவாக்க முடியாது. அதனால், முன்னோர்கள் உயிரை கொடுத்து உருவாக்கிய கோயிலை உயிர் போல காக்க வேண்டும். மதுரையில் இது போல பாரம்பரிய பெருமை பேசும் கோயில்கள் பல உள்ளன. அந்த கோயில்களையும், மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயில்களையும் முறையாக பராமரிக்க, பாதுகாக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொ.பொன்காவியா, மாணவி, மதுரை

குறையும் ஆன்மிக உணர்வு: மீனாட்சி அம்மன் கோயில் ஐந்தாண்டுகளில் பெரிய சுற்றுலா தலமாக மாறி விட்டது. இதனால், ஆன்மிக உணர்வு குறைந்து கொண்டே வருகிறது. கோயிலில் உள்ளூர் பக்தர்களை மதிப்பது இல்லை. சுவாமிகளை தரிசிக்க வெளிநாட்டு, வெளிமாநில பக்தர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதை கோயில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். ஆகம விதிகளை முறையாக பின்பற்றி, கோயில் வளாகத்தை துாய்மையாக பாதுகாக்க வேண்டும். ஆடி வீதிகளில் குப்பை சிதறி கிடப்பதை ஊழியர்கள் அகற்றுவதில்லை. பக்தர்களும் கோயிலுக்கு வருகிறோம் என்ற உணர்வுடன் உடல் மற்றும் மன துாய்மையுடன் வந்து சென்றால் நல்லது. -ஆர்.கஸ்துாரி, குடும்பத் தலைவி, மதுரை

நெய் தீபம் ஏற்றலாமே: உலக அதிசயமாக கருதப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்றால் சந்தேகம் தான். பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தால் தீ விபத்து நடந்திருக்காது. மேலும் தற்போது எல்லா கோயில்களிலும் சூடம் ஏற்றுவது தவிர்க்கப்படுகிறது. அதுபோல மீனாட்சி அம்மன்கோயிலில் பக்தர்கள் நெய் தீபம் ஏற்ற அறிவுறுத்திட வேண்டும். பக்தர்களும் கோயிலுக்கு செல்கிறோம் என்ற பயபக்தியுடன் சென்று வர வேண்டும். கடைகளை அகற்றுவது வரவேற்கத்தக்கது.
-வி.சசிகலா தேவி, குடும்பத்தலைவி, மதுரை

மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை 625 016 என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். mdureporting@dinamalar.in

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் சஷ்டி விரதம் முக்கியமானது. முருகனுக்கு அறுபடை வீடுகள், ஆறுமுகம் போல ஆறாம் ... மேலும்
 
temple news
கோவை : சுண்டைக்கா  முத்தூர் பை-பாஸ் ரோடுபொட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் திருக்கோயில் யானை பவானிக்கு ரூ. 43 லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சின்னசேலம் ... மேலும்
 
temple news
ஹாசன்; ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar