பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
காளையார்கோவில்:காளையார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விடிய, விடிய 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது, விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகள் விடிய, விடிய நடைபெற்றன. சவுந்திரநாயகி அம்பிகை- சோமேஸ்வரர், சுவர்ணவல்லி - சொர்ண காளீஸ்வரர், மீனாட்சி அம்பிகை சுந்தரேஸ்வரர், சகஸ்ர லிங்க சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், ேஹாமம், அபிேஷகங்கள் நடைபெற்றது. மேலும் வேதபாராயணங்களும், திருமுறை பாராயணங்களும், அன்னதானமும் நடைபெற்றது. திருக்கானப்பேர் களஞ்சியத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் தேவஸ்தான் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கோயில் ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள், தேவஸ்தான் மேலாளர் இளங்கோ மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.