நத்தம், நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதி சிவாலயங்களில் சிவராத்திரி விழா நடந்தது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமி மற்றும் செண்பகவல்லி அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலில் 1008 சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணி முதல் பூஜைகள் துவங்கியது. பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிேஷகங்கள் நடந்தது. இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடந்தது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.