பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
தேவகோட்டை:சிவராத்திரியை முன்னிட்ட தேவகோட்டை பகுதியில் கோயில்களில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இறகுசேரி மும்முடிநாதர் கோவில், கைலாசநாதர் கோயில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தன.
தாழையூர் உசிலையுடைய அய்யனார் கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோயிலில் இரவு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை தாழையூர் கிராமத்திலிந்தும், இறகுசேரி, தானாவயல் பகுதிகளிலிருந்தும் ஒருவர் கருப்பராக சாமியாட்டம் ஆடியபடி வர மற்ற பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம், எடுத்து அலகுகள் குத்தியும் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். இறகுசேரியில் சுடலை மாட சாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பகலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.கோட்டூர் நயினார் வயலில் அகத்தீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கும் அங்குள்ள மகாகாளகருப்பர், பரிவார சுவாமிகளுக்கும் நான்கு கால பூஜைகள் நடந்தன. கீரணி துாது ஜெயங்கொண்ட அய்யனார் கோயில், துடுப்பூர் காமாட்சியம்மன் கோவில், கப்படை சிலையுடைய அய்யனார் கோயில், ஈகரை ஆற்றங்கரை நாச்சியாரம்மன் கோவில் உட்பட கிராம கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வெளியூரிலிருந்தும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் பூர்வீக ஊர்களுக்கு வந்து குலதெய்வங்களை வழிபட்டு சென்றனர்.