பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
தேனி மாசி மகாசிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சுவாமிக்கு நான்கு கால பூஜை, சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், தேனி அல்லிநகரம் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி (சிவஜெயந்தி) விழா நடந்தது. கோயில் கமிட்டியின் சுகுணா, ராணி, சகோதரி விமலா குத்துவிளக்கு ஏற்றி துவக்கினர். பிரம்மா குமாரிகள் இயக்க சகோதரி வாசுகி, பிறப்பு இறப்பற்ற இறைவனுக்கு எதனால் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பனிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், அங்குள்ள இறைவனின் பெயர் காரணங்கள்,’ போன்றவற்றை விளக்கினார்.
சகோதரிகள் வசந்தா, விமலா, ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சிவராத்திரி விரதம், இரவு முழுக்க கண்விழித்திருப்பதன் நன்மை குறித்த ஆன்மிக விளக்கம் அளிக்கப்பட்டது. தேனி என்.ஆர்.டி., நகர், பழனிசெட்டிபட்டி, சின்னமனுார், பெரியகுளம், லட்சுமிபுரம், ஓடைப்பட்டி, நாகலாபுரம், பூதிப்புரம், ரத்தினாநகர், கோம்பை, க.புதுப்பட்டி, லோயர்கேம்ப், கே.கே.பட்டி, கம்பம், கூடலுார், உத்தமபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.
* சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அபிேஷகம், ஆராதனை நடந்தது. பூஜைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
* உத்தமபாளை யம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகைகோயில்,கம்பராயப் பெரு மாள் கோயிலில் சிவ னுக்கு சிறப்பு பூஜை,தீபாராதனை நடந்தது.
* கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிவனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
* கூடலுார் சீலைய சிவன் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
.*ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.