பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
எலச்சிபாளையம்: கல்லாங்காடு, அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானகொள்ளை திருவிழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அடுத்த, ஜேடர்பாளையம் அருகே, கல்லாங்காடு அங்காளபரமேஸ்வரி, வீரஜடாமுனீஸ்வரர், பெரியஆச்சியம்மன் கோவிலில், நேற்று, மூன்றாமாண்டு மயானகொள்ளை திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம், பால்குடம் அழைத்து வருதல், அம்மன் அலங்காரம், சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 7:30 - 10:30 மணி வரை சிறப்பு பூஜை, மதியம், 12:00 மணிக்கு அங்காளம்மனுக்கு முப்பூஜை, 12:30 - 1:30 மணி வரை அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு பூமிதி திருவிழா, தொடர்ந்து, மயான கொள்ளை நடந்தது.
* குமாரபாளையம், அங்காளம்மன் கோவில், தட்டான்குட்டை மயான வளாக அங்காளம்மன் கோவில், பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில், மயான கொள்ளை நடந்தது. பல்வேறு அம்மன் வேடங்கள் போட்டவாறு, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோழி, ஆடு ஆகியவற்றை, கடித்தவாறு ஆக்ரோஷ நடனமாடியபடி வந்தனர். சேலம் பிரதான சாலையில், மாலை, 4:00 முதல், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.