Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் ... 133 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தெப்பம் பிப்.21ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் பிப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 2ல் தெப்பம் நடைபெறுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் 11நாட்கள் நடைபெறும். பிப்.,20 மாலை 5:30 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. முதல் திருநாள் பிப்.,21 காலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன் திருநாள் மண்டபம் எழுந்தருளல் நடைபெறும்.

தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்குகிறது. தினசரி காலை பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாள் பிப்.26 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பிப்.27 மாலையில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகமும், மார்ச் 1 காலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவில் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் காட்சிதருதலும், மார்ச் 2ல் பகல் 12:45மணிக்கு பகல் தெப்பமும், இரவில் 10:00 மணிக்கு தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மார்ச் 3ல் காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும். பெண்கள் கோயிலிலும், தெப்பக்குளத்திலும் தீபம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளை பிரார்த்திப்பது இந்த உற்ஸவத்தின் சிறப்பு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  சிவகங்கை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar