மதுரை : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கல்லுாத்து அருகே கல்யாணிபட்டி சித்தர்மலை மகாலிங்கம் கோயில் பாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயிலுக்கும் செல்லும் பழைய பாதை பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். பாதையை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி மறுப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதையை சீரமைக்கவும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நன்செய், புன்செய் விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் தலைமையில் விவசாயிகள் மதுரையில் கலெக்டர் வீரராகவ ராவிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து வனத்துறையினருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.