பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவ விழா, இன்று காலை, 7:30 - 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்றிலிருந்து, தினமும் காலை, இரவு வேளைகளில், சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாடவீதிகளில் வீதியுலா வருவார். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், முக்கிய நிகழ்வான தேரோட்டம், 26ம் தேதியும், அதை தொடர்ந்து தெப்போற்சவம், மார்ச் 1ம் தேதியும் நடைபெறும். பின், மார்ச் 4ம் தேதி நடக்கும் திருக்கல்யாண உற்சவத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவுபெறும். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 10 நாட்களும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.