பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த, 13ல் பூச்சாட்டுதல், நேற்று, மறுபூச்சாட்டுதல் நடந்தது. தம்மண்ணன் சாலை, தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் கணபதி யாகம், கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வாசுகி நகர், கோட்டைமேடு, கள்ளிபாளையம், பெருமாபாளையம், சுள்ளிமடைதோட்டம், சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில், பூச்சாட்டு விழா நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷக, அலங்கார, ஆராதனைகள் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.