பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஈரோடு, கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கி பூஜை நடந்து வருகிறது. நேற்றிரவு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்கார பூஜையுடன், கொடியேற்றம் நடந்தது. வரும், 25ல் காலை, 9:00 மணிக்கு பால் அபி?ஷகம், 26ல் இரவு, 8:00 மணிக்கு அக்னி கபாளம், 27ல் மாலை, 6:00 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல், 28ல் அதிகாலை, 5:00 மணிக்கு தீ மிதித்தலும் நடக்கிறது. அன்று காலை பொங்கல் வைபவம், இரவு, 9:00 மணிக்கு நூதன அலங்காரத்துடன் நாதஸ்வர இன்னிசையுடன் நகர்வலம் நடக்க உள்ளது. மார்ச், 1ல் மாலை, 5:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. குண்டம் இறங்குவதற்கு, கங்கணம் கட்டி கொள்ள வரும் பக்தர்கள், நீராடி மஞ்சள் நூல் ஆடை அணிந்து வருமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.