மதுரையில் கள்ளழகர் ஏப். 30 ல் வைகையில் இறங்குகிறார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2018 10:02
மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் ஏப்., 30 காலை 5:45 முதல் 6:15 மணிக்குள் இறங்குகிறார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் விழா ஏப்., 26 துவங்குகிறது. ஏப்., 28 மாலை 4:45 முதல் 5:15 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கம்பு, வில் அம்புடன் கண்டாங்கி பட்டு உடுத்தி மதுரைக்கு புறப்படுகிறார்.
ஏப்., 29 காலை மூன்று மாவடியில் பக்தர்கள், கள்ளழகரை எதிர் கொண்டு அழைக்கும் எதிர் சேவை நடக்கிறது. ஏப்.,30 காலை 5:45 முதல் 6:15 மணிக்குள் வைகையில் இறங்குகிறார்.
மே 1ல் தேனூர் மண்டபத்தில் மண்டடூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், ராமராயர் மண்ட பத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 2 அதிகாலை மோகன அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளி க்கிறார். இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. மே 3 இரவு அப்பன்திருப்பதி வந்து அதிகாலை அழகர் கோவில் திரும்புகிறார்.