பழநி: பழநியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடும்பன் மலையில் சமூகவிரோதிகள் தீவைப் பதால், மரஞ்செடி, கொடிகள் எரிந்து கருகிப் போகின்றன.
பழநி மலைக்கோயிலை "சக்தி கிரி என்றும் இடும்பன்மலையை "சிவகிரி என்றும் பக்தர்கள் கூறுவர். முதலில் இடும்பனை தரிசனம் செய்தபின்பே, முருகனை வணங்க வேண்டும் என் பது ஐதீகம்.
இதனால் பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகளவில் செல்கின்றனர். இந்த இடும்பன் மலை யைச் சுற்றி 3 கி.மீ., தொலைவுக்கு முட் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டியுள்ளது. பின்புறத்தில் குப்பையை கொட்டுகின்றனர். சில சமூகவிரோதிகள் மலை அடிவாரத்தில் மது, கஞ்சா, மாமிசம் உண்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களால் தீவைக்கப்படு வதால் காய்ந்த மரங்கள், செடிகள் எரிந்து கருகின்றன.
இடும்பன்மலையில் வலது புறத்திலிருந்து முருகன்கோயிலுக்கு செல்லரோடு உள்ளது. இட துபுறத்தில் பைபாஸ் ரோட்டை இணைத்து கிரி வலப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. கிரிவலப்பாதை அமைத்து, சுற்றிமரங்கள் நடடு வைத்தால் பசுமைச் சூழல் உருவா கும். இடும்பன்மலை கிரிவலப்பாதை, பாதுகாப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.