Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ... கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் முதல் மண்டல பூஜை கோலாகல துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2011
10:12

கடையநல்லூர் : சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயில் முதல் மண்டல பூஜை நெய் அபஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சாம்பவர்வடகரையில் சுவாமி ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்று திருத்தலம் வடிவமைக்கப்பட்டு பரசித்தி பெற்று விளங்கி வருகிறது. பக்தர்களுக்கான சுதந்திர வழிபாட்டு கோயிலாக சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை பொறுத்தவரை வழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடில்லை. பக்தர்கள் கருவறையில் அமர்ந்து சுவாமி ஐயப்பனை வழிபடலாம். மாலையணிந்த குருசாமிகள் சுவாமி ஐயப்பனுக்கு அபஷேகம் செய்து வணங்கலாம். கருவறையை சுற்றி வெளிப்பரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, துர்க்கை, அன்னை காயத்ரி, காமாட்சி, ஜெயலட்சுமி, நாகராஜர், முத்துவிநாயகர், அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீராமர், சீதை லெட்சுமணர், சுப்பரமணியன், வள்ளி, தெய்வானை, மாளிகைப்புரத்து அம்மன் ஆகிய சுவாமிகள் ஐம்பொன்னால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரக சன்னிதானங்களும் ஐம்பொன்னால் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பெற்ற சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தை அடுத்து சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் சாம்பவர்வடகரை கோயிலுக்கு வந்து தங்களது விரதத்தை முடித்து செல்கின்றனர். இந்த கோயில் முதல் மண்டல பூஜை நேற்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6.30 மணிக்கு சாம்பவர்வடகரை டவுன் பஞ்., தலைவி செல்விமூர்த்தி திருவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. 8 மணிக்கு உற்சவமூர்த்தி ஒப்படைப்பு விழா நடந்தது. உபயதாரர்கள் ‘ரியமூர்த்தி, பேப ‘ரியமூர்த்தியிடம் இருந்து உற்சவ மூர்த்தியை ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பரமணியன் கோயில் சார்பாக பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் தென்காசி டிஎஸ்ப., பாண்டியராஜன், நெல்லை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன், தென்காசி தாசில்தார் ராசையா, சாத்தான்குளம் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் சுப்பரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு உற்சவர் புறப்பாடும், 8.45 மணிக்கு சுவாமி ஐயப்பன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு கோயிலில் நெய் அபஷேகம் நடந்தது. கோவை ஜெயலட்சுமி முருகன் நெய் அபஷேகத்தை துவக்கி வைத்தார். விழாவில் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், சுரண்டை பழனிநாடார், சிவகாசி செல்வமணி, ஆறுமுகம், அகரக்கட்டு அந்தோணிவியாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6மணிக்கு ஐயப்பன் அடியாளர்கள் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஐயப்பன் அடியார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar