பழநி: பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழாவில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடக்கிறது.பழநி கிழக்குரதவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,9ல் துவங்கி மார்ச் 1 வரை நடக்கிறது. இதில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு அதற்கு மஞ்சள்நீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். பிப்.,20ல் கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைத்து (தீச்சட்டிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மன் தங்கமயில், சிம்மம், வெள்ளியானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. முக்கியநிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணமும், தங்கக் குதிரை வாகனத்தில் அம்மன் உலாவும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் மாரியம்மன், வீரலட்சுமி பூச்சொரிதல் ஊர்வலம் நடக்கிறது. நாளை (பிப்.,28ல்) மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ல் கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது.