பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வெளிபிரகார மதில் சுவற்றில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு பாதிப்பு என பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவரை பாதுகாக்க, இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலுார் மலையமாநாட்டின் தலைநகரம். கோபுரங்கள் நிறைந்த கோவலுார். திருட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். முதல் ஆழ்வார்கள் அவதரித்து தமிழில் பாசுரம் பாடிய பெருமை இங்குள்ள உலகளந்த பெருமாளுக்கு உண்டு.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் விரிவுபடுத்தி கட்டப்பட்டது. கிருஷ்ணரண்ய ஷேத்ரம் என இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. பெருமை மிக்க இத்தலத்தில் அணுவுக்கு அணுவாகவும் உலகையே ஆளும் ஓங்கி உயர்ந்த உத்தமனாகவும் பெருமாள் வாமன உருவிலும் உலகளந்த பெருமாளாகவும் காட்சியளிக்கிறார். சிறப்புவாய்ந்த இத்தலம் பல்வேறு அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தநிலையில் மன்னர்கள் ஆட்சி நிறைவுற்று, மக்களாட்சிதுவங்கியவுடன் ஜீயர் பரம்பரை நிர்வாகத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிலமாகவும் பொருளாகவும் பலரும் தானம் வழங்கிய செய்திகள் கல்வெட்டாகவும் ஆவணங்களாகவும்இருக்கிறது. இருந்தாலும் சமீபகாலத்தில், இக்கோவிலுக்கு சொந்தமான பல நுாறு ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டது என்ற பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கோவிலுக்கு சொந்தமான பூந்தோட்டங்களும் பிளாட்போட்டு வீடுகளாக்கப்பட்டு விட்டது. தற்போது எஞசிநிற்பதுகோவில் மட்டுமே. அந்த கோவிலையும் சுற்றி ஆக்கிரமித்து கடைகளும் வீடுகளும் முளைத்து விட்டது.கோவில் மதில் சுவற்றை சுற்றி, ஒருகாலத்தில் சுவாமி வலம்வருவது வழக்கமாக இருந்ததாக கூறுகின்றனர் வயதுமூத்தவர்கள். அதனை இன்று கதையாக மட்டுமே கேட்க முடிகிறது. சிலர் மதில்சுவற்றை ஒட்டி ஆக்கிரமித்து, பல லட்சங்களுக்குவிலைபேசி விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்கப்படும் இடத்தில், மதில்சுவற்றை பாதிக்கும்வகையில் ேஹாட்டல்களும் வீடுகளும் அனல்கக்கும் அடுப்பை மூட்டி, மதில்சுவற்றை பாழாக்கி வருகின்றனர். இதனால் கோவிலின் புனிதத்தன்மை பாதிப்பதுடன் கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி, கோவில்கோபுரங்களின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர்ந்த கட்டடங்களை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் மதில்சுவற்றிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் கோவிலின் புனிதத்தன்மை பாதிப்பதுடன் கோவிலின் அழகை பாதிக்கும் வகையிலான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகம் தனியாரிடம் இருந்தாலும் அதனை கண்காணிக்கும் பொறுப்பு இந்துசமய அறநிலையத்துறையிடம் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலின் புனிதத்தையும் பழமையையும் மீட்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நமது சிறப்பு நிருபர்-