திருச்சூர்– எர்ணாகுளம் சாலையில் 11 கி.மீ., தூரத்தில் திருக்கூர் சிவன் கோயில் உள்ளது. இதை “வழுக்குப்பாறை சிவன் கோயில்” என்பர். இக்கோயிலின் வடக்கு வாசலில் உள்ள பெரிய பாதாளத்தில், குற்றவாளிகளை தள்ளி கொல்லும் வழக்கம், திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் இருந்தது. யாராவது அதில் தள்ளப்பட்டும் தப்பிவிட்டால், அவரை சிவனே மன்னித்தாக கருதி, ராஜ உபசாரம் செய்வர். அரசு செலவிலேயே வைத்தியம் செய்து, மானியமாக நிலம் வழங்கப்படும். பரமேஸ்வரனாக அவர் மதிக்கப்படுவார்.