மகாமக குளத்தில், குடும்பத்திலுள்ள அனைவரும் நீராடவில்லை என்றாலும் ஒருவர் மட்டும் நீராடினாலும் போதும்! முந்தைய, இப்போதைய தலைமுறையினர் செய்த பாவம் நீங்கி விடும். இனி வரப்போகும் தலைமுறையினர் பாவம் செய்யாத நிலை கிடைக்கும். தன் குடும்பம், தாய்வழி குடும்பம், தந்தை வழி குடும்பம், சம்பந்தி (பெண்ணை எடுத்தவர்) வழி குடும்பம், சிற்றன்னை குடும்பம், உடன்பிறந்தோர் குடும்பம், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பம், தாய்மாமன் மற்றும் பெண் கொடுத்த மாமனார் குடும்பம் ஆகிய ஏழு வகை குடும்பங்களும் பாவம் நீங்கி புண்ணியம் பெறுவர். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. குளித்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனதில் பாவ எண்ணம் உருவாக கூடாது.