ராஜபாளையம்; ராஜபாளையம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசி மகா பிரம்மோற்ஸவத்தினைமுன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் ஏழாம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக,அதிகாலை முதல் மூலவர், உற்ஸவருக்கு விசேஷ அபிேஷகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றன. மாலையில் நாத சங்கம இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி, அம்பாள் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக காட்சியளித்தார். ஏற்பாடுகளை ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் செய்திருந்தது.
சாத்துார்: சாத்துாரில் அனைவராலும் சாத்துாரப்பன் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில், சாத்துாரப்பன், ஸ்ரீதேவி பூதேவி சமேத திருமணம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. இதையொட்டி கணபதி ேஹாமம்,ஸ்ரீசதர்ஸண ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடந்தது. ஆயக்குடி ராமர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், கோவை கோபாலகிருஷ்ணன் கிருஷ்ண நாட்டியம் நடந்தது. சுற்று வட்டார பஜனை கோஷ்டியுடன் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசாத்துாரப்பன் சுவாமி நகர் வலம் வந்தார். சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் சுந்தரராசு, தக்கார் சுமதி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.