திருக்கோஷ்டியூர் தெப்பம்: பக்தர்கள் வருகை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2018 11:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில்மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை துவங்கியுள்ளது. தெப்ப அலங்காரம் கட்டுவதற்கான முகூர்த்தக்கால் நேற்று ஊன்றப்பட்டது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசித் தெப்ப உற்ஸவம் பிப்.,21ல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. தினசரி காலை பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். நேற்று ஏழாம் திருநாளை முன்னிட்டுமாலை5:30 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாளிடம் ஆசி பெற்று முகூர்த்தக்கால் தெப்பக்குளத்திற்கு மேளதாளத்துடன் புறப்பட்டது. பின்னர் குளத்தின் கிழக்கு படித்துறை தெப்பம் அருகில் முகூர்த்தக்கால் குளத்தினுள் ஊன்றப்பட்டது. பின்னர் கோயிலில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகம் நடந்தது. தெப்ப அலங்காரம் முடிந்த பின்னர் மார்ச் 1ல் வெண்ணெய் தாழி அலங்காரத்தில் பெருமாள் அவதரித்து பகல்12:40 மணி அளவில் தெப்பம் முட்டுதள்ளுதல் நடைபெறும். உற்ஸவத்தை முன்னிட்டுநேற்று முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. வெளிமாவட்டத்திலிருந்து வாகனங்களில் பெண்கள் அதிகளவில் வந்து பெருமாளை தரிசித்தனர்.மார்ச் 2ல் பகல் 12:45மணி அளவில் பகல் தெப்பமும், இரவில் 10:00 மணிக்கு தெப்பம் வலம் வருதலும் நடைபெறும்.